சரத்குமார் அவர்களுக்கு ஒரு அக்கா இருக்கிறார் தெரியுமா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.!

0

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார் இன்றுவரை சரத்குமார் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. இவர் நடிகராக ஜொலிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடிகர் ராதிகா அவர்களை திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

பல நடிகர்கள் நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என நடித்து வருகிறார்கள் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் சரத்குமார் அவர்களும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக சரத்குமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வானம் கொட்டட்டும்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சரத்குமார் அவர்கள் பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சரத்குமார் அவர்கள் தனது சமூக வலைதள பக்கம் ஆன ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது அக்காவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் உண்மையாலும் சரத்குமார் அவர்களுக்கு அக்கா தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் சரத்குமார் அவர்கள் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பிறந்தால் பராசக்தி, அடங்காத ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சரத்குமார்.

sarathkumar
sarathkumar