பிரபல நடிகரை அடிக்க மறுத்த நடிகர் சரத்குமார்..! ஷூட்டிங் ஸ்போட்டில் நடந்த சம்பவம் – வெளிவரும் உண்மை.

90 கால கட்டங்களில் தொடர்ந்து ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை கண்டவர் நடிகர் சரத்குமார். இப்பொழுது வயதாகி போனதால் சினிமா உலகில் ஹீரோ என்ற அந்தஸ்து கிடைக்கவில்ளையே தவிர வாய்ப்புகள் ஏராளமாக சரத்குமாருக்கு குவிந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் தற்பொழுது கூட விஜயின் வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் இது தவிர தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன நடிகர் சரத்குமார் சினிமா உலகில் பல வெற்றிகளை ருசித்தாலும்..

சினிமாவையும் தாண்டி அரசியலிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறார் சினிமா நிஜ வாழ்க்கை என இரண்டிலும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சரத்குமார் விஜயகாந்த் பற்றி பேசிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நான் சினிமாவுல ஆரம்பத்தில் பல வெற்றிகளை சந்தித்தாலும்..

ஒரு கட்டத்தில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது அப்பொழுது எனக்கு கை கொடுத்தவர் விஜயகாந்த் தான் விஜயகாந்த் மீது எனக்கு இப்பொழுதும் நிறைய மரியாதை இருக்கிறது என கூறினார் மேலும் பேசிய அவர் புலன்விசாரணை படத்தின் இறுதி காட்சியில் சரத்குமார் வில்லன் ரோலில் நடித்திருப்பார் அந்த காட்சியில் விஜயகாந்தை நேருக்கு நேர் சண்டையிட்டு மோத வேண்டும் அதில் சரத்குமார் விஜயகாந்த் அடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்..

ஆனால் சரத்குமார் விஜயகாந்த் சார் மீது இருந்த மரியாதை காரணமாக விஜயகாந்த்தை அடிக்க தயங்கினாராம் அவரை சமாதானப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் வில்லனிடம் அடி வாங்கி பின்பு நான் அடித்தால் தான் காட்சி நன்றாக இருக்கும் என கூறி நடிக்க வைத்தாராம். சினிமா உலகில் ஹீரோக்கு இமேஜ் குறைந்த விடக்கூடாது என நினைப்பார்கள் ஆனால் விஜயகாந்த் அப்படி கிடையாது தங்கமான மனசு அவருக்கு என சரத்குமார் விஜயகாந்த் பற்றி புகழ்ந்து பேசினார்.

Leave a Comment