ஹீரோ முடிச்சதும் தயாரிப்பாளர் அடுத்த இயக்குனர் என படுத்தால்தான் பட வாய்ப்பா.? சரத்குமார் மகளுக்கே இப்படி ஒரு நிலைமையா.?

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் நடிகர் சரத்குமார் இவரின் மகள் தான் வரலட்சுமி. இவர் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார், தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனால் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாக கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2 என பல திரைப்படங்கள் நடித்து வந்தார். மேலும் வரலட்சுமி சரத்குமார் நடித்தால் ஹீரோயின் ஆக மட்டும் நடிக்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து வந்தார் அந்த வகையில் சண்டைக்கோழி 2 மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்களில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் தற்பொழுது நடித்து வருகிறார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறியதுதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது அது மட்டும் இல்லாமல் சரத்குமாரின் மகளுக்கு இந்த நிலைமையா என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அவர் கூறியதாவது பொதுவாக சினிமாவில் பட வாய்ப்பு வேண்டும் என்றால் ஹீரோ தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரிடம் படுத்தால் மட்டுமே பட வாய்ப்பு கிடைக்கும் என கூறுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட பட வாய்ப்பு எனக்கு வேண்டவே வேண்டாம் என வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இரவு தூங்கும் பொழுது நிம்மதியாக தூங்க வேண்டும் என்னுடைய சொந்த முயற்சியால் மட்டுமே நான் முன்னேற வேண்டும். இது போல் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் முன்னேற வேண்டும் என்ற நினைப்பு யாருக்குமே வரக்கூடாது  என அவர் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் சமீப காலமாக  பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் அவ்வப்பொழுது வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அதிலும் சமீப காலமாக நடிகைகள் பலரும் தனக்கு நேரும் பிரச்சனைகளையும் துன்புறுத்தல்களையும் நடிகைகள் பலரும் வெளிப்படையாக கூறி வருகிறார்கள் இதனால் சமீப காலமாக சினிமாவில் சில குற்றங்கள் குறைந்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version