Sarathkumar with son – சரத்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை ராதிகா ஏற்கனவே திருமணம் ஆகி மகள் இருந்த நிலையில், சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அவரின் மகன் குழந்தையாக இருந்த போது சில புகைப்படங்கள் வெளியாகின. அதன் பின்னர் அவரை பற்றிய புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ஆடும் போட்டியை காண சரத்குமார், ராதிகா மற்றும் அவரின் மகன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளர். அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் சரத்குமாரின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
On our way to Manchester to watch India against West Indies, thrilled and excited to be in the midst of live action #CWC2019 #INDvsWI pic.twitter.com/Jnm67058aQ
— R Sarath Kumar (@realsarathkumar) June 27, 2019