தமிழ் சின்னத்திரைக்கு தனியார் தொலைக்காட்சியின் மூலம் ஆங்கராக அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் அர்ச்சனா. சன் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அர்ச்சனா பிறகு அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேலும் இவருடைய ஆங்கரிங் ஸ்டைல் பலருக்கும் பிடித்து போக ரசிகர்கள் மத்தியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இவ்வாறு தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு ஜீ தமிழில் ச ரி க ம ரியாலிட்டி ஷோவில் கலம் இறங்கிய நிலையில் பிறகு தனது மகளுடன் இணைந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் நடித்திருந்தனர். பிறகு அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது இதன் மூலம் இவருக்கு அதிக ஹாட்டஸ்ட்கள் உருவாகினார்கள்.
இவ்வாறு அதே நேரத்தில் தன்னுடைய மகளுடன் இணைந்து பாத்ரூம் டூர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அர்ச்சனா, சாரா இருவரையும் சோசியல் மீடியாவில் பங்கம் செய்தனர். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் சாரா தன்னுடைய அம்மாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் சாரா பற்றிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சாராவுக்கு விஜய் சிலையை ஒருவர் பரிசாக தந்துள்ளார் இதனை பார்த்தவுடன் சாரா யார் இதை அனுப்பியது என்ற ஆனந்தத்தில் கதறி அழுகிறார் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Thalapathy @actorvijay Fan girl Zara Cute Moment 🤩❤️ #Varisu #LEO #BloodySweet pic.twitter.com/xljkC0t4w7
— Jahir Hussain 𝓣𝓱𝓪𝓵𝓪𝓹𝓪𝓽𝓱𝔂𝓥𝓲𝓳𝓪𝔂47👑 (@Jahir2441) March 15, 2023