சூப்பர் டீலக்ஸ் படத்தை விடவா என் படம் கேவலமாக இருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் காட்டம்.!

0

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் பல இயக்குனர்கள் அந்த லிஸ்டில் முதல் ஆளாக இருப்பது இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைபடம் ஹர ஹர மகாதேவி இந்த திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளியாகியது இந்த திரைப்படம் வெற்றியடைந்ததால் அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் சந்தோஷ் ஜெயகுமார் திரைப்படம் வெளியானால் கலாச்சார சீர்கேடு என ஒரு கூட்டமே எதிர்த்து வருகிறார்கள். யார் எதிர்த்தாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு படத்தை இயக்கி வெளியிட்டு பல கோடி ரூபாய் லாபம் பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் சந்தோஷ் ஜெயக்குமார், இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதுகுறித்து சந்தோஷ் ஜெயகுமாரிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்கவேண்டும் என கூறி தான் படத்தை வெளியிடுகிறோம்.

இதை சமுதாயக் சீர்கேடு என்றால் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் மனைவி கணவனுக்கு தெரியாமல் தவறான உறவு வைத்துக் கொள்வது மட்டும் சமுதாய சீர்கேடு இல்லையா என காட்டமாக பேசியுள்ளார்.

மேலும் இது குறித்து கூறுகையில் இஸ்டம் என்றால் படத்தை பாருங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என காட்டமாக பதில் அளித்துள்ளார்.