இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் ஹர ஹர மகாதேவி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தார் அந்த திரைப்படம் அடல்ட் கலந்த காமெடி திரைப்படமாக உருவானதால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அடல்ட் ஜானரில் படத்தை இயக்கி வந்தார், அதாவது இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தை இயக்கி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அதுமட்டுமில்லாமல் திரைப்படம் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தை சந்தோஷ் விஜயகுமார் இயக்கி முடித்துள்ளர் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் மோசமாக அருவருக்கத்தக்க இருந்ததால் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள் அதுமட்டுமில்லாமல் டீசர் வெளியாகி மக்களை முகம் சுளிக்க வைத்தது.
ஏனென்றால் அந்த டீசரில் ஆபாசம் நிறைந்த காட்சிகளும் இரட்டை அர்த்தங்களும் இடம்பெற்றிருந்தது என இந்த டீஸருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் அவ்வாறு ரிலிஸ் செய்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு விடும் எனவும் பலரும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் அதேபோல் இரண்டாம் குதது திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆனால் அவர் பூஜை செய்த புகைப்படம் தான் சர்ச்சையை கிளப்பி விட்டது. ஆபாசம் நிறைந்த புகைப்படங்களை வைத்து பூஜை செய்துள்ளது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
