500 நாட்களுக்கு மேல் ஓடிய சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பட குழு.! அப்போ கலெக்ஷன் அல்லிடுமே..

2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி இந்தத் திரைப்படத்தை பி. வாசு என்பவர் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது மேலும் கன்னட திரைப்படமான அபாம்மித்ராவின் ரீமேக் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு வித்தியாசாகர் தான் இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார் தற்பொழுது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மே 15 முதல் மைசூரில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தை வெளியிட இருக்கிறது படக்குழு அதனால் பட குழு பண்டிகை நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரமுகி இரண்டாவது பாகம் 2005 இல் வெளியாகிய தமிழ் கிளாசிக் திரைப்படம்.

இந்த திரைப்படம் 500 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது இந்த திரைப்படத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல் ஆகியோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தார்கள். வசூலிலும் மெகா வேட்டை நடத்தியது அதேபோல் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சந்திரமுகி இரண்டாவது பாகத்தையும் பி வாசு அவர்கள் தான் இயக்கி வருகிறார். இவருடன் ராகவா லாரன்ஸ், கங்கன, வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா, கார்த்திக் சீனிவாசன் என பலர் நடித்துள்ளார்கள். சந்திரமுகி இரண்டாவது பாகத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் ஒலிப்பதிவாளர் ரவிவர்மா ஆகியோர்கள் பணியாற்றி உள்ளார்கள் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்கள் நடைபெறும் எனவும் ஜூன் மாதத்திற்குள் படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment