ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து இருப்பார்கள் அதன்பிறகு திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள தெரியாமல் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள் ஒரு சில நடிகைகள் வெள்ளித்திரையில் பிரபல முடியவில்லை என்பதற்காக சின்னத்திரையில் நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அஜித் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். என்னதான் ஒரு நடிகை தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருந்தாலும் கடைசியில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் இப்படித்தான் நடக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த சீரியலில் 2014ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். இவர் இன்னும் சில சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.
கல்லூரி முடித்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இவரின் இரண்டாவது படமே அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் வள்ளுவன் வாசுகி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இத்திரைப்படத்தை தொடர்ந்து ஸ்வேதா பந்தேகர் தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும்,துணை நடிகையாகவும் நடித்து வந்தார் இதன் மூலம் பிரபலமடைந்தவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இந்த சீரியலை தொடர்ந்து சந்திரலேகா, நிலா, ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.