சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள சந்தானம் வைரலாகும் புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் பங்கு பெற்ற பலரும் தற்போது சினிமாவில் தொட முடியாத உயரத்திற்கு இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சிவகார்த்திகேயன்,சந்தானம் என சொல்லிக்கொண்டே போகலாம் சந்தானம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து வந்தார் காமெடியனாக இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலம் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது இவரது நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்கு துட்டு,A1,டகால்டி,பாரிஸ் ஜெயராஜ்,பிஸ்கோத் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது சந்தானத்தை பொதுவாக பல நிகழ்ச்சிகளில் பார்த்து இருக்கலாம் ஆனால் அவரைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அந்த தகவல் என்னவென்றால் சந்தானம் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஆம் இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அண்ணாமலை என்ற சூப்பர்ஹிட் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த சீரியல் ராதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை மக்களிடம் பெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்துள்ள புகைப்படமும் ஒன்று கிடைத்துள்ளது.

santhanam

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் சந்தானம் சீரியலில் நடித்து உள்ளாரா என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version