சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகியது.! அதுவும் இப்படி ஒரு தலைப்பா மாஸ் காட்டுறாரே

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் முதலில் நடித்து கொண்டு பிரபலமடைந்தார், அதன்பிறகே வெள்ளித்திரையில் சிம்பு நடித்த மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களுடன்  காமெடியனாக நடித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார், இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த டகால்டி திரைப்படம் வெளியாகியது.

மேலும் டகால்டி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது வசூலும் கல்லாக்கட்டி வந்த நிலையில் தற்போது சந்தானம் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ரெடியாகி விட்டார் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த படத்தின் டைட்டிலை தற்போது சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த திரைப்படத்திற்கு பிஸ்கோத் என பெயரிட்டுள்ளார்கள். டைட்டில் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment