சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகம் ஆகி பிரபலமடைந்து பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கால் தடம் பதித்தவர் சந்தானம், இவர் தற்பொழுது காமெடி அணியாக நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக நடித்து வருகிறார், இவர் நடிப்பில் சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தில்லுக்குதுட்டு 2 இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஏ1 திரைப்படத்தில் நடித்துவருகிறார் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படியிருக்க சந்தானத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் ஏனென்றால் இந்த புகைப்படத்தில் சந்தானம் மிகவும் ஒல்லியாக நோய்வாய்ப்பட்டது போல் இருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் சந்தானத்திற்கு ஏதாவது நோய் இருக்கிறதா என அதிர்ச்சி அடைகிறார்கள்.
சமீபத்தில் பேஸ் ஆப் பயன்படுத்தி தாங்கள் வயதானால் எப்படி இருக்கும் என புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள், ஆனால் சந்தானம் இப்பொழுது இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள், ஃபேஸ் ஆப் இல்லாமலேயே இப்படி இருக்கிறாரே என மிகவும் பரிதாபமாக பார்க்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் எடை குறைவது பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது உடல் எடையை குறைத்து வருகிறேன் அதன் பின்னர் மீண்டும் நன்றாக சாப்பிட்டு பழையபடி ஆகி விடுவேன் எனக் கூறியுள்ளார் ஆனால் சந்தானத்தை இந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.