கோடியில் புரளும் வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

santhanam net worth : நடிகர் சந்தானம் தற்பொழுது தன்னுடைய 44 வயது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். நடிகர் சந்தானம் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்படித்தான் சிம்பு நடிப்பில் வெளியாகிய வல்லவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி ஹீரோவாக நடித்துள்ளார். காமெடியானாக இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் சந்தானத்தின் கால் சீட் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது அந்த அளவு காமெடியில் உயர்ந்து கொண்டிருந்தார்.

அதேபோல் நான் ஈ படத்திற்காக ராஜமவுலி சந்தானத்தின் கால் சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த வரலாறு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அரை எண் 305 கடவுள் திரைப்படத்தில் கதையின் நாயகனாக மாறிய சந்தானம் லட்டு திங்க ஆசையா, இனிமேல் இப்படிதான் என தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

நடிகர் சந்தானம் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி தான் சென்னையில் பிறந்தார். கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இது தொடர் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை வெளியிட இருக்கிறார். இன்று மாலை வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா  ஆகாஷ் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் இதற்கு முன்பு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தவர். ஆனால், தற்பொழுது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். சந்தானத்திற்கு காமெடியாக நடித்த பொழுது தோல்வியே கிடையாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஹீரோவான பிறகு பல திரைப்படங்கள் தோல்வியும் சில திரைப்படங்கள் வெற்றியும் கொடுத்துள்ளது .

இந்த நிலையில் சந்தானத்தின் சொத்து மதிப்பு விவரம் தற்போது தெரியவந்துள்ளது 2004 ஆம் ஆண்டு சந்தானம் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஹாசினி என்ற மகளும் நிபுன் என்ற மகனும்  இருக்கிறார்கள். சென்னையில் சந்தானத்திற்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது அது மட்டும் இல்லாமல் சந்தனத்திற்கு 14 கோடி வரை சம்பளமாக கிடைத்து வருகிறது.

ஓட்டு மொத்தமாக சந்தானம் இதுவரை 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதுவரை வசதியான வடக்குப்பட்டி ராமசாமியாகவே வாழ்ந்து வருகிறார் சந்தானம்..