அரபி குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அரபி குத்து பாடலை படக்குழு வெளியிட்டது இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் யூடியூபில்  மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் அரபி குத்து பாடலுக்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் நடனமாடிய அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அதற்கு அதிக லைக்ஸ் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா ,பூஜை, யாஷிகா ஆனந்த் கீர்த்தி சுரேஷ், மணிமேகலை, சிவாங்கி என ஒட்டுமொத்த பிரபலங்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டார்கள் அதேபோல இந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஆஷ்னா ஜாவேரி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய அதன் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ அதிகம் லைக் கமெண்ட் குவித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆஷ்னா பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர் நடனமாடிய வீடியோ.

Leave a Comment