கண்ணுல ஈரம் இல்லாமல் காதலைக் கடக்க முடியாது வெளியானது சந்தானத்தின் கீக் பட டிரைலர்.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கால் தடம் பதித்தவர்களில் பலர் இருந்தாலும் சந்தானம் தனி ஒரு மனிதனாக நிலைத்து நிற்கிறார் அது மட்டும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பலர் காணாமல் போய் இருக்கிறார்கள் ஆனால் சின்னத்துறையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடியனாக நுழைந்து தற்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம் இவர் காமெடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது அது மட்டுமில்லாமல் சந்தானம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் வெற்றி வகை சூடியுள்ளது அதனால் சந்தானம் தனியாக நடித்தால் ஹீரோவாக நடிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “கிக்” இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திலிருந்து ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தை கனடா இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹாப்  நடித்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு தாராள பிரபு ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் மேலும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் ஜன்யா இசையில் சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடல் சமீபத்தில் தான் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான்,  மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி, ஆகியோர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்த ட்ரெய்லரில் சந்தானத்தின் காமெடி அதிகமாக இருப்பதால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தானத்திற்கு இந்த திரைப்படம் ஹிட் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ ட்ரெய்லர்

Leave a Comment