சூர்யா நடித்த அந்த கதாபாத்திரத்தில் சந்தானமா.? இயக்குனர் விக்ரமன் சொன்ன பதிலால்.. புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்

0
santhanam-surya
santhanam-surya

தமிழ் சினிமாவில் இன்று பல டாப் நடிகர்கள் ஆக்சன் படங்களில் நடித்து வந்தாலும் ஆரம்பத்தில் கமர்சியல் மற்றும் காதல் படங்களில் நடித்து தான் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் காதல் மற்றும் கமர்சியல் படங்களை எடுப்பதில் மிகவும் கைதேர்ந்தவர் விக்ரமன் இவர் சூர்யா, சரத்குமார், விஜய் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணியவர்.

அப்படி இவர் எடுத்த ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக தோல்வியின் விளிம்பில் சிக்கிக் கொண்டிருந்த தளபதி விஜயை வைத்து பூவே உனக்காக என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் விஜயின் சினிமா கேரியரில் ஒரு டேர்னிங் பாயிண்ட் படமாக இது இருந்தது.

அதேபோலவே தான் நடிகர் சூர்யா தொடர்ந்து ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்தாலும் உன்னை நினைத்து படம் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது அதன் பிறகு தான் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில்..

இயக்குனர் விக்ரமன் தன்னுடைய படங்கள் குறித்தும், விஜய் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார். அப்போது உன்னை நினைத்து படம் குறித்தும் பேசினார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இப்பொழுது உன்னை நினைத்து இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளேன்.

vikraman
vikraman

சூர்யாவுக்கு பதில் சந்தானத்தை நடிக்க வைக்க இருப்பதாக கூறினார் மேலும் பேசிய அவர் உன்னை நினைத்து இரண்டாம் பாகத்தில் சந்தானத்துடன் சேர்த்து பல காமெடி நடிகர்களையும் சேர்த்து ஒரு டுபாக்கூர் அந்த லாட்ஜை எப்படி நடத்துகிறார் என்பதை ஒரு படமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக விக்ரமன் கூறி இருக்கிறார்