பலரும் பார்த்திடாத சந்தானத்தின் அப்பா அம்மா புகைப்படம்.!

0

santhanam father and mother : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில் தான் அவர்களின் காமெடிக்கு இன்றுகூட மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது அந்த அளவு இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கவுண்டமணி செந்திலுக்கு பிறகு காமெடியில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு அதன்பிறகு காமெடியில் கலக்கி வருபவர் நடிகர் சந்தானம் தான், சந்தானம் முதன்முதலில் லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் டீ கடை பெஞ்சு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

பின்பு விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர், இவரின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அடுத்ததாக இவருக்கு வெள்ளித்தரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளித்திரையில் தன்னுடைய முதல் திரைப்படமே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார், ஆனால் ஒரு காலகட்டத்தில் திடீரென காமெடியனாக நடிப்பதை நிறுத்தி விட்டார்.

பின்பு முழு நேர ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார், இவர் ஹீரோவாக நடித்த சில திரைப்படங்கள் ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது, அதுமட்டுமில்லாமல் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

santhanam-tamil360newz 1
santhanam-tamil360newz 1

இந்த நிலையில் சந்தானம் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், சந்தானத்தின் அப்பா அம்மா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது.

இந்த புகைப்படம் பல ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் இதோ அந்த புகைப்படம்.

santhanam-tamil360newz 2
santhanam-tamil360newz 2