மூன்று விதமான மாஸ் கெட்டப்பில் சந்தானம்.! வெளியானது டிக்கிலோனா போஸ்டர்

நடிகர் சந்தானம் முதன் முதலில் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார் அதனைத்தொடர்ந்து இவர் சினிமாவில் காமெடியனாக கால்தடம் பதித்தார், அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சந்தானம் பல திரைப்படங்கள் வெற்றி ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

பிறகு சந்தானம் இனி காமெடியனாக நடிக்க மாட்டேன் என சபதம் எடுத்து நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என இப்பொழுது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார், ஹீரோவாக நடித்து சில சர்க்கரைகளை சந்தித்தாலும் சுதாரித்துக்கொண்டு அடிக்கடி ஹிட் திரைப்படங்களும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகிய தில்லுக்குதுட்டு இரண்டாவது பாகம் மற்றும் A1 திரைப்படங்கள் வசூலில் கல்லா கட்டியது. இந்த நிலையில் சந்தானம் தற்போதைக்கு கேஆர் ஸ்டூடயோ தயாரிப்பில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கிறார்.

படத்திற்கு டிக்கிலோனா என பெயர் வைத்துள்ளார்கள் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது இந்த திரைப்படத்தின் பெயரை ஜென்டில்மேன் படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடியில் இருக்கும் டிக்கிலோனா என்ற பெயரையே வைத்துள்ளார்கள். என திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சந்தானத்தை இதுவரை பார்க்காத புதிய லுக்கில் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள்.

sandhanam-dikkilona
sandhanam-dikkilona

Leave a Comment