santhanam dikkilona 2nd look poster : நடிகர் சந்தானம் முதன் முதலில் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் நடித்து வந்தார் அதன்பிறகு காமெடி நிகழ்ச்சிகள் ஹிட்டானதால் இவர் சினிமாவில் கால்தடம் பதித்தார் சினிமாவில் முதன் முதலில் காமெடியனாக தான் நடித்து வந்தார் இவர் நடித்த பல திரைப்படங்களில் இவரின் காமெடி ஒர்க் அவுட் ஆனதால் ஹிட்டானது.
பின்பு சந்தானம் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என ஹீரோவாக களம் இறங்கினார், ஹீரோவாக களம் இறங்கிய சந்தானம் பல வெற்றி படங்களையும் சில தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார், இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா.
டிக்கிலோனா பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல் தெரிகிறதா அது வேறெங்குமில்லை ஜென்டில்மேன் திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடிதான், டிக்கிலோனா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் சந்தானம் கிட்டத்தட்ட ஆடை இல்லாமள் இருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார், இது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் சந்தானம் ஆடை இல்லாமல் இருக்கும் பொழுது அவரை அதிர்ச்சியுடன் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்கள் பார்ப்பது போலிருக்கிறது.
சந்தானம் இப்படி ஆடை இல்லாமல் இருப்பது அவர்களுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி என்பது குறிப்பிடதக்கது இன்று வெளியாக இருக்கும் மூன்றாவது லுக் இருக்கு எப்படி இருக்கும் என்று மேலும் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Sandhanam புதுசா ட்ரை பன்றாரு போல #dikkilona pic.twitter.com/8qKpvn6YEA
— tamil360newz (@tamil360newz) May 29, 2020