பல கெட்டப்பில் வலம் வரும் சந்தானம்.! மிரட்டும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் இதோ.

0

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம் இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். வெள்ளி திரையில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நட்சத்திர நடிகர்களை தொடர்ந்து அந்த இடத்தை பூர்த்தி செய்தார்.

நடிகர் சந்தானம் இப்படி காமெடியில் கிங்காக வலம் வந்து கொண்டிருந்த சந்தானம் திடீரென நடிகராக மாறினார். இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர் காமெடியில் இப்படி வந்தவர் ஹீரோவாக என கேள்வி எழுப்பி வந்தனர்.சந்தானம்  ஹீரோவாக  தனது  திறமையை வெளிப்படுத்தி அத்தகையவர்களுக்கு பதில் அடி கொடுத்தார்.

தமிழ் சினிமா உலகில் தன்னால் ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை தமிழ் சினிமா மக்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது அவர் பிஸ்கோத்து, சர்வர் சுந்தரம் போன்ற பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிஸ்கோத்து படத்தின் டிரைலர் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை கண்ணன் அவர்கள் இயக்குகிறார் மேலும் இப்படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது எடிட்டர் ஆர் கே செல்வா. ஸ்டண்ட் ஹரிஷ் தினேஷ் பலருக்கு இப்படத்தில் பணியாற்றியுள்ளனர் மேலும் இப்படத்தில் ஹீரோவாக tara-alisha மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் இதோ.