சந்தானம் நடித்திருக்கும் A1 படத்தின் திரை விமர்சனம்.!

0
A1
A1

காமெடியில் செந்தில் கவுண்டமணிக்கு பிறகு வடிவேலு வந்தார் அதன் பிறகு வடிவேலு இடத்தை நிரப்புவதற்காக சந்தானம் வந்தார், ஆனால் சந்தானம் பாதியிலேயே காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரம் ஹீரோவாக தான் நடிப்பேன் என கூறி சில திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் இன்று A1 திரைப்படம் வெளியாகியுள்ளது இது ரசிகரிடம் வெற்றி பெற்றுள்ளதா என்பதை காணலாம்.

படத்தின் கதை

படத்தில் சந்தானத்தின் ஹீரோயின் சில லோக்கல் ரவுடிகளிடம் சிக்கிக் கொண்டு  அவரை சந்தானம் சண்டை போட்டு காப்பாற்றுகிறார், உடனே வழக்கம் போல் தமிழ் சினிமாவில் கண்டதும் காதல் என்பது போல் சந்தானத்தின் மேல் அவருக்கு காதல் மலர்கிறது உடனே கட்டி அணைத்து கிஸ் அடித்து விடுகிறார்.

சந்தானம் ஒரு லோக்கல் பையன் என்பது அவருக்குத் தெரியவில்லை ஏன் என்றால்  அவரை காப்பாற்றும் போது நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டே அக்ரகாரத்து  பையன் போல இருப்பார், அதனால் தான் ஹீரோயின் இவர் மீது காதல் கொள்கிறார், ஆனால் அடுத்தநாள் சந்தானம் யார் என்பதை தெரிந்து கொண்டு பிரேக்கப் செய்கிறார்.

இப்படி படம் நகர ஒரு நேரத்தில் நடிகையின் அப்பா நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சந்தானம் தான் காப்பாற்றி உதவி செய்வார், இதை பார்த்த நடிகைக்கு சந்தானம் மீது மீண்டும் காதல் மலர்கிறது, இதனை நம்பி சந்தானமும் அவர் குடும்பத்துடன் பெண் கேட்க அவர்கள் வீட்டிற்கு செல்கிறார் ஆனால் அங்கு அவமானம் தான் அவருக்கு கிடைத்தது.

குடித்துவிட்டு தனது நண்பர்களிடம் சந்தானம் ஒளர அவர்கள் நல்லது செய்வது போல் எதையோ செய்து செய்துவிடுகிறார்கள் அது சந்தானத்திற்கு பிரச்சனையை உண்டாக்குகிறது அந்த பிரச்சனையிலிருந்து சந்தானம் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தைப் பற்றி

இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்த கதைதான், ஆனால் படம் முழுக்க நிரம்பி இருப்பது சந்தானத்தின் ஒன்லைன் காமெடி, தனக்கு காமெடிதான் வரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதில்தெளிவாக நடித்துள்ளார், படத்தில் நடிகை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடித்தேடி அலைந்து தாரா அலிசாவை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார்கள் இவர் என்னதான் அழகாக இருந்தாலும் நடிப்பில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

மேலும் படத்தில் விஜய் டிவி தங்கதுரை, லொள்ளு  சபா மனோகர், எம்எஸ் பாஸ்கர் மொட்டை ராஜேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது அதனால் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை, திரையரங்கில் பல காமெடிகளுக்கு சிரிப்பு சத்தம் கேட்டாலும் ஒருசில காமெடிக்கு இதெல்லாம் ஒரு காமெடியா என மனதில் நினைக்க தோன்றுகிறது.

படத்தில் சந்தானம் மற்றும் அவர்களின் டீம் காமெடி அனைவரையும் ரசிக்கவைத்தது, அதேபோல் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை ரசிக்க வைத்தாலும் பாடல்கள் மனதில் நிற்கவில்லை, அதுமட்டுமில்லாமல் படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தது காமெடி படம் என்பதால் லாஜிக் எதையும் இயக்குனர் கண்டுகொள்ளவில்லை. ஆக மொத்தத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவை வெள்ளித்திரைக்கு கொண்டுவந்தால் எப்படியோ அப்படிதான் திரைப்படம் பார்த்தவர்களுக்கு மனதில் எழும்.

படத்தை எதிர்பார்த்து போகாமல் இரண்டு மணி நேரம் காமெடி ரசிக்கலாம் என்று அனைவரும் நம்பிப் போகலாம்.

A1 = 2.5/5