சந்தானம் நடிக்கும் A1 படத்தின் ரிலீஸ் தேதி இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
a1
a1

A1 santhanam movie : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம், இவர் தமிழில் சிம்புவின் படத்தில் தான் அறிமுகமானார், அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்பு தான் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

பின்பு இவர் ஒரு காலகட்டத்தில் காமெடிக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார், அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் காமெடி ஹீரோவாக நடித்தது இல்லை, இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் A1  திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை வருகின்ற ஜூன் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.

a1
a1