விஜய் டிவிக்கு டாட்டா சொல்லிவிட்டு சன் டிவி பக்கம் ஒரே தாவா தாவிய பிரபல நடிகையின் கணவர்.!

0

விஜய் டிவியில் ஹீரோவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தொடர்ந்து இரண்டு சீரியல்களில் நடித்து கலக்கி வந்த நடிகர் ஒருவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக சினிமாவிற்கு அறிமுகமாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் விஜய் டிவியில் கலந்து கொள்ள ஆசைப்படுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டவர்கள் பலரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கலக்கி வருகிறார்கள். எனவே சினிமாவில் வளர வேண்டுமென்றால் அதற்கு விஜய் டிவிதான் ஒரு நல்ல அங்கீகாரமாக அமைகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ஒருவர் சன் டிவிக்கு மாறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ராஜா ராணி சீரியலின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சஞ்சீவ். இவர் குளிர் 100 டிகிரி, ஆங்கில படம் போன்ற சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இருந்தாலும் இவருக்கு திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் சின்னத்திரையில் நடிப்பதை ஆரம்பித்தார். அந்த வகையில் தான் ராஜா ராணி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆலியா மானசா நடித்திருந்தார்.

sanjeev aliya manasa
sanjeev aliya manasa

இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சன் டிவி ஒரு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து தங்களது சீரியல் ஒன்றில் நடிப்பதற்காக சஞ்சீவ்வை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இத்தகவலை சஞ்சீவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதோடு இவர் சன் டிவியில் நடிக்கவுள்ள இந்த சீரியல் மாலை 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.