சஞ்சீவ் கொடுத்த முத்தத்துடன் டிப்ஸ் கொடுத்த ஆல்யா மானசா.! வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இந்த சீரியலை காண ரசிகர் கூட்டம் டிவி முன்பு கண் சிமிட்டாமல் பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ், அந்த சீரியலில் ரீல் காதலராக இருந்த இவர்கள் நிஜ காதலராக மாறினார்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது இணைந்து பேட்டிகள் கொடுப்பது என வாடிக்கையாக இருந்தார்கள், இந்த நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

தற்பொழுது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இந்த தம்பதிகள், சில நாட்களுக்கு பிறகு ஆல்யா மானசா கர்ப்பமாக இருக்கிறார் என சஞ்சீவ் அறிவித்தார், இந்த நிலையில் ஆல்யா மானசாவிற்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது, இந்த குழந்தையின் புகைப்படத்தை சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்படியிருக்க சஞ்சீவ் ஆல்யா மானசா விற்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் முத்தத்துடன் கர்ப்பிணி பெண்களுக்கு சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்கள்.

Leave a Comment