துப்பட்டாவை கயிறாக்கி அசால்டாக தென்னை மரத்தில் ஏறிய பிரபல நடிகை !! வைரலாகும் வீடியோ.!! இவங்க தான் உண்மையான சிங்க பெண் எனக் கூறும் ரசிகர்கள்.

0

sanjana singh climbing coconut tree video :தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சஞ்சனா சிங். மேலும் அந்த திரைபடத்தை தொடர்ந்து இவர் காதல் பாதை, ரகளைபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், மீகாமன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திரைப்படம் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா ஊறடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி இருப்பவர்களில் நடிகை சஞ்சனா சிங் ஒருவர் ஆவார். அந்த வகையில் நடிகை சஞ்சனா சிங் தனது மேனேஜர் வெங்கட்டின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிறகு சென்ற நடிகை சஞ்சனா சிங் தனது துப்பட்டாவை கயிறாக்கி தனது காலில் கட்டிக் கொண்டு அங்கிருக்கும்  உயரமான தென்னை மரத்தில் சரசரவென மரத்தின் உச்சி வரை ஏறினார்.

எப்படி இது என கேட்டதும் 20 வருடத்திற்கு முன் தென்னை மரம் ஏறினேன் தற்போது அந்த ஞாபகம் வந்துவிட்டது. அதன் பிறகு இப்போது ஏறினேன் எனக் கூறியுள்ளார். எனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள்தான் உண்மையான சிங்கப்பெண் என கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் இன்னும் உயரம் செல்ல வாழ்த்துக்கள் எனவும்  தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.