சானியா மிர்சா கோபம்!! உணவின்றி மக்கள் தவிக்கும் போது நடிகைகள் சமையல் வீடியோ பதிவிடுவது சரியா?

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றி வருகிறார்கள். மக்கள் அன்றாட தேவைக்காக சிரமப்பட்டு வருகின்றனர். உண்ண உணவு இல்லாமலும் அத்தியாவசிய தேவை பொருட்களுக்காகவும் உயிரையும் பணயம் வைத்து கஷ்டப்படுகிறார்கள். இந்த சமயத்தில் பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் சமையல் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதா ? என பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது நம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் உயிரிழக்கிறார்கள். உணவு கிடைத்தால் அது அவர்கள் அதிர்ஷ்டம் என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையின்றி தவிக்கும் அன்றாடக் கூலி தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் இதர அடிப்படை தேவைகளுக்காக 1.25 கோடி நிதி திரட்ட சானியா மிர்சா உதவியுள்ளார். ஒரு குழுவாக அமைத்து கடந்த ஒரு வாரத்தில் 1.25 கோடி திரட்டினாராம்.

இந்தத் தொகை ஒரு லட்சம் பேருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் இது போன்ற சமையல் வீடியோ போடுவதை நிறுத்தவும் என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Comment