பொதுவாக அரசியல்,விளையாட்டு, சினிமா போன்றவற்றில் பெரும் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விளையாட்டில் தோனி, நடிகையர் திலகம், ஜெயலலிதா உட்பட இன்னும் பலரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை கிடைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது டென்னிஸ் விளையாட்டின் வீராங்கனை சானியா மிர்சா அவரின் வாழ்க்கை வரலாற்றை தற்பொழுது படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த விளையாட்டில் இவரின் விடாமுயற்சியால் பல விருதுகளை பெற்றுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் மிகவும் அற்புதமாக விளையாடியதால் இந்திய மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில் தனுஷ் பட நடிகை ஒருவர் இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அது வேறு யாருமில்லை தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த டாப்சி தான். டாப்சி இதனைத்தொடர்ந்து காஞ்சனா 3 உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக தமிழில் நடிக்காமல் மற்ற மொழித் திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் டாக்ஸி சானியா மிர்சா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.