நிறை மாத கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இப்படியா நடனம் ஆடுவது சாண்டி மாஸ்டர் மனைவியின் நடனத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

0

சினிமாவில் எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என சாதாரண மக்களும் தற்போது பல சமூக வலை தளத்தை பயன்படுத்தி தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் டிக் டாக் செயலி மிகவும் பிரபலமாக இருந்தது ஆனால் தற்போது அந்த செயலியை முடங்கியதால் பல பிரபலங்கள் யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத் தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய திரைப்பட நடன ஆசிரியராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர் இவர் முதன்முதலில் நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராக பணியாற்றினார் அதுமட்டுமில்லாமல் மேடை நாடகங்களை தொகுத்து வழங்கி வந்தார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக அறிமுகமானார்.

அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியால் ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் திரையுலக பிரபலம் காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார் ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர் பின்பு 2017 ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கலைஞர் தொலைக்காட்சி மூலம் நடன ஆசிரியராக அறிமுகமான இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும்  நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்களித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த 2019ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 பங்கேற்றார்.

இந்தநிலையில் இவரின் மனைவி சில்வியா வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகப் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் அவர் மிகவும் ஸ்டைலாக நடனமாடுகிறார் ஆனால் இவர் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் நடனம் ஆடுவதாக ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.