யானை மிதித்து சாக கிடந்தப்ப கூட அந்த இடத்தில் கை வைத்து சுகம் கண்டார்கள்.! பக்கீர் கிளப்பிய பிரபல நடிகை.

Sandhya Jagarlamudi : சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு பல இயக்குனர் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என தொல்லை கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதிலும் சமீப காலமாக மிகவும் வெளிப்படையாக நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை ஏராளமான நடிகர்கள் எதிர்கொண்டு தான் வருகிறார்கள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற கொடுமை சினிமாவில் தலைவிரித்து ஆடுவதை இதுவரை யாருமே தீர்வு காணாமல் இருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில் சீரியலில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை சந்தியா தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பேட்டி ஒன்றில் கண்ணீருடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்ப கொண்டிருந்த சீரியல் தான் வம்சம்.

இந்த சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்தியா ஜாகர்லாமுடி இவர் சில கசப்பான அனுபவங்களுக்கு பிறகு சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு தெருநாய்களை பாதுகாத்து வரும் பணியை தொடர்ந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் சந்தியா ஜாகர்லாமுடி தன்னுடைய கசப்பான அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

சந்தியா ஜாகர்லாமுடி கூறியதாவது 2006 ஆம் ஆண்டு சீரியல் ஒன்றின் அறிமுக பாடல் காட்சியை கும்பகோணத்தில் உள்ள கோயிலில் படமாக்கி கொண்டிருந்தோம் அப்பொழுது கோயில் யானையுடன் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த யானை திடீரென தன்னை தாக்கியது. ஆனால் இதுவரை அந்த யானை மீது எனக்கு கோபமே வந்தது கிடையாது யானை தாக்கியதால் உடலில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டது.

யானை தாக்கிய பொழுது நான் மயக்கம் அடைந்து கிடந்தேன் அப்பொழுது சக கலைஞர்கள் என்னை காப்பாற்ற ஓடி வந்தார்கள் அதிலிருந்து உயிர் பிழைத்தது மிகப்பெரிய விஷயம் என கூறினார். அது மட்டும் இல்லாமல் யானை என்னை தும்பிக்கையால் தான் தாக்கியது ஆனால் அந்த வலியே அது என்னை போட்டு மிதித்தது போல் இருந்தது. இந்த நிலையில் அந்த யானையிடம் இருந்து மீட்டு சிலர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள் அப்பொழுது என்னுடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நடன கலைஞர்கள் தான் தூக்கி சென்றார்கள் நான் உயிர் போகும் வலியில் துடித்துக் கொண்டிருந்தேன்.

என்னை தூக்கிக் கொண்டு சென்ற டான்ஸர்களில் ஒருவர் அந்த நேரத்தில் கூட என்னுடைய அந்த இடத்தில் கை வைத்து சுகம் கொண்டு இருந்தார் என் வாழ்க்கையில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் என்றால் அது இதுதான்  சொல்வேன் என கண்ணீருடன் கூறினார். அந்த டைமில் நான் ஒரு பிணமாக தான் கிடந்தேன். அப்ப கூட இப்படியா செய்வார்கள் நான் சற்று மயக்க நிலையில் இருந்ததால் அந்த டான்சர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் தவறாக நடந்து கொண்டதை நான் உணர்ந்தேன் இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொன்னதில்லை அதிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது என கண்கலங்கியபடி அந்த பேட்டியில் கூறினார் சந்தியா ஜாகர்லாமுடி .

Leave a Comment