காதலர் தினத்தையொட்டி புதிய காதலருடன் பொழுதை கழித்த சனம் ஷெட்டி.! இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

சினிமா உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமலஹாசன் சமீபகாலமாக வெள்ளித்திரையில் தலை காட்டவில்லை என்றாலும் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசனில் தலைகாட்டி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது.

பிக்பாஸ் வீட்டில் முன்னணி பிரபலங்கள் பலர் ஒன்று சேர்ந்து விளையாடினாலும் ஒரு சிலர் மட்டும் தனித்து விளையாண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்  அந்த வகையில் ஆரி, சனம் ஆகியோர் தனித்து நின்று மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தனர்.

அதிலும் சனம்ஷெட்டி எதனை சொல்ல வேண்டும் என்றாலும் நேருக்கு நேர் பேசுவது, நேர்மையாக விளையாடுவது என இருந்தாலும் அவரால் நீண்ட நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கி பிடிக்கமுடியாமல் வெளியேறினர்.

வெளியே வந்த  சனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் பட வாய்ப்பை கைப்பற்றி வருகிறார்.

அவ்வபோது ரசிகர்களோடு சமூக வலைதளப் பக்கத்தில் உரையாடி ரசிகர் மத்தியில் மென்மேலும் வளர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு காதலர் தினத்தையொட்டி சனம் ஷெட்டி வெகு சிறப்பாக கொண்டாடினார்.

புதிய காதலருடன் சனம் இரவு டின்னரை மேற்கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது .

இருப்பினும் அந்த ஆணின் முகம் அதில் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sanam shetty
sanam shetty
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment