பிக்பாஸ் 4- ல் விளையாண்ட சம்யுதாவா.? சீரியலில் நடிக்க போறது.. எந்த சீரியல் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையை பொருத்தவரை டிஆர்பி யில் நல்ல முன்னேற்றம் காண புதுவிதமான நிகழ்ச்சிகளை கையாளுவது வழக்கம் அதிலும் குறிப்பாக விஜய் டிவி ஒரு நிகழ்ச்சி அதிரிபுதிரி ஹிட் அடித்தால் அதை சீசன் சீசனாக நடத்தப்படுவது கைவந்த கலை.

அந்த வகையில் கமலஹாசனை வைத்து தொடங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இது முதலிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த சீசன் தொடங்கியனை மிக சிறப்பாக நடத்தி அசத்தியது விஜய் டிவி அந்த வகையில் தற்போது நான்கு சீசன்கள் வெற்றிகரமாக சம்பத்தில் முடிந்தது.

அதிலும் நான்காவது சீசன் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது காரணம் இதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி இந்த 100 நாட்கள் சண்டையும் சச்சரவும், சந்தோஷத்துடனும் பயணித்தார்கள் அதை மக்கள் மன்றம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

நான்காவது சீசனில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர் ஆனால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்தவர்கள் மிக சிலரே அந்த வகையில் சனம் செட்டி, சம்யுத்தா, பாலாஜி, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், ஆரி ஆகியோர்தான் இந்த நூறு நாட்களாக பெரிதும் பேசப்பட்டன.

சம்யுக்தா இதில் ஒரு டீமில் இணைந்துகொண்டு ஆரியை கடும் சொற்களால் விமர்சித்துக் கொண்டே இருந்ததால் இவரை ரசிகர்கள் ஒரு பக்கம் கிழித்து தொங்க விட்டாலும் பிக் பாஸ் சீசன் 4 – ல் வெளிவந்த இவருக்கு அதிர்ஷ்டங்கள் அடிக்கத் தொடங்கின.

அந்தவகையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை தொடர்ந்து  தற்பொழுது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது இதில் தற்போது ஒரு சிறிய ரோலில் நடிக்க உள்ளார் அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக உள்ளது.

இவர் இதற்கு முன்பாக ராஜா ராணி மற்றும் கண்ணம்மா இணைந்து சங்கமம் என்ற என்ற பெயரில் சில காலங்கள் ஓடியது அதில் இவர் தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment