பிக்பாஸ்ல சண்டை போட்டுக்கிட்ட இவங்க!! இப்ப ஒன்னா என்ன குத்து குத்துறாங்க!! வைரலாகும் வீடியோ.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். அதோடு தொடர்ந்து இவர்களுக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சம்யுதா. இவர் மாடலிங்காக பணியாற்றி வந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலானதால் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இவர் ஒரு சண்டையில் நடிகர் ஆரியை வளர்ப்பு சரி இல்லை என்று கூறிய ஒரே வார்த்தையால் ஆரியின் ரசிகர்கள் அடுத்த வாரமே சம்யுத்தாவை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்ததை மறந்து விட்டு அனைத்து பிக்பாஸ் பிரபலங்களும் தங்களது அன்பை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சம்யுத்தாவும் பலரை நேரில் சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 4 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் ஆகியோர் நடுவராக பணியாற்றி வருகிறார்கள்.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் சம்யுத்தாவிற்கு ஜோடியாக ஜித்தன் ரமேஷ் நடனமாடி வருகிறார். அந்த வகையில் இவர்கள் நாக்கு முக்கா பாடலுக்கு ஒன்றாக நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.