சூப்பர் மாடல் என மீராமிதுனை கலாய்த்த சம்யுக்தா.! புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த மீரா மிதுன்.! வீடியோ உள்ளே

0

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் பிரபலம் அடைந்துள்ளார்கள் அந்தவகையில் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மீரா மிதுன்.

இவர் தன்னை ஒரு சூப்பர் மாடல் என அடிக்கடி தன்னை தானே விளம்பரப் படுத்திக் கொள்வார், இவர் என்னதான் திரைப்படங்களில் சிறிய காட்சிகளில் நடித்து இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது ஏகப்பட்ட கெட்ட பெயரோடுதான் வெளியேறினார்.

அதேபோல் வெளியே வந்ததும் அடங்காமல் சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் அதை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை பறக்க விட்டார்கள், அதுமட்டுமில்லாமல் மீராமிதுன் விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் ஆகியோர்களை அவதூறாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

சமீபகாலமாக வளர்ந்த நடிகர்களை விமர்சனம் செய்து பிரபலம் அடைய நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள் அந்த வகையில் மீராமிதுன் ஒருவர், இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக்பாஸ் நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசனில் மீராமிதுன் சூப்பர் மாடல் பட்டத்தை மறைமுகமாக தாக்கி கலாய்துள்ளார் சம்யுக்தா.

நான் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன் ஆனால் என்னை ஒரு சூப்பர் மாடல் என்று அழைத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார் அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் குபீர் என சிரித்து விட்டார்கள். அதற்கு காரணம் மீராமிதுன் தன்னை ஒரு சூப்பர் மாடல் என அடிக்கடி கூறிக் கொண்டது தான்.

இதற்க்கு பதிலளித்த மீரமிதுன் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலளித்துள்ளார்.