அச்சு அசல் சமுத்திரகனி போலவே இருக்கும் அவரது மகன்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0
samuthirakani
samuthirakani

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனராகவும் கதையாசிரியர் ஆகவும் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் பல திறமைகளை வெளிக் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இவர் முதன் முதலில் சினிமாவில் உன்னை சரண் அடைந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

அதன்பிறகு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகிய நெரஞ்சமனசு, நாடோடிகள் என பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் நடிகனாக பல திரைப்படங்களில் சமுதிரகணி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி ரைட்டர் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அப்படியிருக்கும் நிலையில் சமுத்திரகனி தற்போது சுமார் 10 திரைப்படங்களுக்கும் மேல் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார் ஒரு சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி இயக்கும் திரைப்படங்கள் சமூக பிரச்சனை சார்ந்த திரைப்படங்களாக இருக்கும் அதனால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இந்த நிலையில் சமுத்திரக்கனி தன்னுடைய மகனுடன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்தால் அச்சு அசல் சமுத்திரகனி போலவே இருக்கிறார் சமுத்ரகனியின் மகன்.

சமுத்திரகனியின் மகன் புகைப்படத்தை பார்த்து சில ரசிகர்கள் இவரும் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சமுத்திரக்கனி மற்றும் அவரின் மகன் ஒன்றாக இருக்கும் புகைப்படம்.

samuthirakani
samuthirakani