தமிழ் சினிமாவில் ஜோடி திரைப்படத்தின் மூலம் சிறு வேடத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா, இவர் ரஜினி கமல் விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
சமீபகாலமாக திரிஷா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இந்த நிலையில் திரிஷா போலவே இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஜெய் ஹனுமான் என்ற சீரியலில் ஹனுமானுக்கு அன்னையாக அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பர்கா பிஷ்ட் சென்குப்தா.இவருக்கு தற்போது வயது 40 ஆகவும் இவரை பார்ப்பதற்காக திரிஷா போலவே தோற்றமளிக்கிறார், கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் 2005ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மற்றும் வாங்கல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.
