கொஞ்சம் கூட மாறாமல் ராஷ்மிகா மந்தனா போலவே இருக்கும் இளம்பெண்.! வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் தடம் பதித்து அங்குள்ள ரசிகர்களை தனது க்யூட் நடிப்பால் கட்டிப் போட்டுவிட்டார், தெலுங்கில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.

அதேபோல் தமிழில் கார்த்தி நடித்துவரும் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமாக இருக்கிறார், இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், ஆமாம் இங்கெம் இங்கெம் என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.

சமீபகாலமாக சமூக வலை தளத்தில் பல பிரபலங்கள் மற்றும் பல ரசிகர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள் அந்த வகையில் மிக முக்கிய செயலியாக பயன்படுவது டிக் டாக், இந்த டிக் டாக் மூலம் பல ரசிகர்கள் தங்களை பிரபலப்படுத்தி கொள்கிறார்கள்.

அந்த வகையில் அச்சு அசல் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனாபோலவே  இருக்கும் ஒரு பெண் டிக் டாக் செய்து அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவா இது என கேட்கிறார்கள்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தை வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version