ஒருகாலத்தில் சினிமாதான் மக்களிடம் அதிக இடம் பிடித்து வந்தது ஆனால் அந்த காலம் மாறிவிட்டது சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தான் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்து வருகிறது. அதிலும் கொரனோ காலகட்டம் ஆரம்பித்ததிலிருந்து சின்னத்திரையை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சினிமாவை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அந்தவகையில் இரவு 10 மணிக்கு மேல் வரும் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கிரிஜா. இவர் இரவு 10 மணிக்கு மேல் டாக்டர்களிடம் பல இளைஞர்கள் கேட்கும் அந்தரங்க கேள்விக்கு சற்றும் முகம் சுளிக்காமல் அதற்கு ஆலோசனை கேட்டு பதில் அளித்து வந்தார் கிரிஜா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் சிறு வயதிலேயே தோல் சம்பந்தமான படிப்பை படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால் பண பிரச்சனையால் அவரால் படிக்க முடியாமல் போனது பின்பு டிவியில் விளம்பரங்களைப் பார்த்து ஆடிஷன் அட்டெண்ட் செய்து பின்னர் சமயல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்பு மும்பை சென்று தன்னுடைய படிப்பையும் தொடர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த உங்கள் நண்பன், சமையல் மந்திரம், அந்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் பல எதிர்ப்புகளையும் சந்தித்தார் இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
இவர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அப்பொழுது தனக்கு வந்த பட வாய்ப்பையும் கூறினார் மேலும் அந்த பேட்டியில் நான் உரையாடுவதை வைத்து என்ன விமர்சனம் செய்ய வேண்டாம் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல இளைஞர்கள் தவறான பாதையில் இருந்து வெளியே வந்துள்ளார்கள் அதோடு பல பெண்கள் தாய்மை பாக்கியம் பெற்றுள்ளார்கள் அதனை சொல்வதில் எனக்குப் பெருமைதான். என அந்த பேட்டியில் கூறினார்.
ஒரு காலத்தில் கிரிஜா அவர்கள் திருமணம் செய்துகொண்டார். இவர் டிவி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய பொழுது பல பட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் இவருக்கு கிடைத்தது அனைத்தும் கிளாமர் ரோல் தான் அதனால் அதனை நிராகரித்தார். வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தன்னுடைய கணவருடன் பலமுறை போட்டோஷூட் நடத்தியுள்ளார் இந்த முறை தன்னுடைய கணவர் கட்டிலுக்கு அலேக்காகத் தூக்கி செல்லும் வகையில் சில போட்டோ ஷூட் நடத்திய அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் விமர்சனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
