த்ரில்லரில் திகிலூட்டும் சமந்தா அடுத்த திரைப்படத்தின் வீடியோ.!

0
samantha yashotha
samantha yashotha

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா ஆகியோருடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமந்தா அடுத்ததாக யசோதா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சற்றுமுன் இந்த திரைப்படத்திலிருந்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள் படக்குழு.

அந்த வீடியோவில் சமந்தா படுக்கையிலிருந்து எழும்போது ஜன்னல் அருகில் ஒரு புறா ஒன்று அமர்ந்துள்ளது அந்த புறாவை சமந்தா தொட போகிறார் அதனுடன் அந்த வீடியோவை முடிக்கிறார்கள். இந்த நிலையில் யசோதா திரை படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு மணிசர்மா தான் இசையமைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஹரி மற்றும் ஹரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சமந்தாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக சமந்தாவுக்கு அமையுமென பலரும் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.