கணவரை பிரிந்த சமந்தா காதலர் தினத்தில் அதிரடி பதிவு.! எல்லா வலியையும் பொறுத்துக்கிட்டு தான் இப்படி போட்டாரோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா இவர் தமிழை தாண்டி பாலிவுட், தெலுங்கு, மலையாளம், என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா தற்பொழுது மன உறுதியுடனும் தைரியத்தாலும் ரசிகர்களை வெகுவாக வென்று வருகிறார்.  இதற்கு முன் சில நாட்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய வேலையை தொடங்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது உடல் குணமாக வேண்டும் என பழனி முருகன் கோவிலில் சூடமேற்றி தரிசனம் செய்தார் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது தன்னுடைய உடற்பயிற்சி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்தநிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

சமந்தா சினிமாவில் ஜெயித்தாலும் தன் வாழ்க்கையில் சில கஷ்டங்களை தாண்டி தான் வந்துள்ளார் ஆசை ஆசையாக காதலித்து வந்த நாக சைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார் சமந்தா ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தார்கள் திடீரென யார் கண்ணு பட்டதோ என்று தெரியவில்லை விவாகரத்து செய்துவிட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

சமந்தா தற்பொழுது விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய வேலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அது மட்டுமில்லாமல் அந்த அரிய வகை நோய்க்குப் பிறகு அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதில் செலவிட்டு வருகிறார் இதனால் நேற்று காதலர் தினம் என்பதால் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய தீவிர உடற்பயிற்சி புகைப்படத்தை பகிர்ந்து  ஹேப்பி வாலன்டைன்ஸ் டே என குறிப்பிட்டுள்ளார்  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருவது மட்டுமல்லாமல் உற்சாகத்துடன் மீண்டும் நீங்கள் நடிக்க வர வேண்டும் விரைவில் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சமந்தா வாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டி இருந்தாலும் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் மேலும் சமந்தா தற்பொழுது தெலுங்கு மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டிலும் வலுவான திரைப்படத்தை கையில் வைத்திருக்கிறார் அவர் விரைவில் பாலிவுட் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

samantha

Leave a Comment

Exit mobile version