சூப்பர் ஹிட் திரைப்படத்தை தவறவிட்ட சமந்தா.. நயன்தாரா கையில் சிக்கி மாஸ் காட்டிய திரைப்படம் தெரியுமா உங்களுக்கு.?

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்பொழுது மிகப்பெரிய நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது இவருக்கு அதிகமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் சாகுந்தலம் இந்த திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த திரைப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது பயங்கரமாக நடந்து வருகிறதாம்.

சமந்தாவின் திரை வாழ்க்கையில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் பாதிக்கு பாதி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தவறவும் விட்டிருக்கிறார் ஆம் அப்படி இவர் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை தவறவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதாவது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் மாயா.

இந்த திரைப்படம் வெளிவந்த பொழுது நயன்தாராவிற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாமல் இதுவரை நயன்தாராவின் திரை வாழ்க்கையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.மேலும் மாயா திரைப்படத்தில் முதலில் நயன்தாராவிற்கு பதிலாக சமந்தா தான் நடிக்க வேண்டுமாம்.

ஆனால் அப்பொழுது என்ன காரணம் என்று தெரியவில்லையாம் சமந்தா இந்த திரைப்படத்தை தவறவிட்டதாக தற்பொழுது இந்த தகவல் வெளியாகி உள்ளது மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் சமந்தா அந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் நன்றாக தான் இருந்திருக்கும்.

nayanthara
nayanthara

ஆனால் நயன்தாரா நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்பை தந்தார்கள்.சமந்தா இதே போல் நிறைய திரைப்படங்களை தவற விட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment