தம்மாத்துண்டு உடையில் சமந்தா.! பக்கத்தில் இருப்பது யார்.? வைரலாகும் புகைப்படம்

0

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவருக்கு இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழில் முதன்முதலாக இவர் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பானா காத்தாடி,  நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் ஆகியவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிஸ் சர்ச்சையை உண்டாக்கியது. ஏனென்றால் இந்த வெப் சீரியஸில் சமந்தாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் சமந்தா தற்பொழுது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது.

மேலும் பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் குறைந்து விடும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதி ஆனால் நடிகை சமந்தாவிற்கு மட்டும் திருமணத்திற்கு பிறகும் பல பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி இருக்கும் வகையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தனது தோழி ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் சமந்தா தன்னுடைய தோழியுடன் குட்டையான உடையில் போஸ் கொடுத்து இணையதளத்தை ஆட்டங்காண வைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha