இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் இவர் இயக்கத்தில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சமந்தா நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த டிரைலரில் இரட்டை அர்த்தங்கள் சமந்தா பேசியுள்ளார். மேலும் நயன்தாராவை குடும்ப குத்து விளக்காகவும் சமந்தாவை கிளாமர் ரோலிலும் நடிக்க வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இவ்வாறு நடிக்க வைத்தது சமூகவலைதளத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ஏனென்றால் விக்னேஷ் சிவன் காதலியான நயன்தாராவை மட்டும் குடும்ப பெண்ணை போல் காட்டி உள்ளார் எனவும் சமந்தாவை கிளாமருக்கு பயன்படுத்தியுள்ளார் எனவும் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
மேலும் எந்த திரைப்படத்தில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முகமது மோபி என்ற கதாபாத்திரத்தில் தான் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார். டிப்பம் டப்பம் என்ற வீடியோ பாடல் வெளியாகிய நிலையில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் சமந்தாவின் காதலனாக அவர் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை ரவுடி பிக்சர் மற்றும் சன்ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.