என்ன சமந்தா மேடம் ஜாக்கெட்டை காணோம்.! சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் 2010-ல் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார், தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் இவர், இந்த நிலையில் தான் காதலித்து வந்த நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டாலே பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு பறிபோய்விடும் ஆனால் நடிகை சமந்தாவிற்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன, மேலும் இவர் பிலிம்பேர் அவார்ட் விஜய் அவார்ட் என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழில் வெளியாகிய 96 படம் மாபெரும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த திரைப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தார்கள் அதேபோல் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்தார்கள் அதில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சமந்தா. இந்த திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவை அணிந்து வந்துள்ளார் சமந்தா அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது.

samantha
samantha

Leave a Comment