12 லட்சம் லைக்ஸ் களை அள்ளிய சமந்தாவின் கட்டிப்பிடி புகைப்படம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா இவர் கட்டிப்பிடி என்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 12 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சமந்தா விண்ணை தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் தமிழில் சூர்யா, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புஷ்பா என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சாகுந்தலம் மற்றும் யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களாக அமைந்துள்ளன அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் விவாகரத்துக்குப் பிறகு சமந்தா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

samantha hug
samantha hug

Leave a Comment