தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கார்த்தி இவர் தற்போது சர்க்கார், விருமன் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகிவரும் விருமன் திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகையாக தமிழில் முதன் முதலில் அறிமுகமாக உள்ளவர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி ஷங்கர் ஆவார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற மே மாதத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நடிகர் கார்த்தி வேறு ஒரு புதிய படத்தில் கமிட் ஆக உள்ளாராம். மேலும் இந்த படத்தில் முன்னணி ஹீரோயினான சமந்தா கார்த்தியுடன் இணைந்து நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து சமந்தா நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து சமந்தாவின் மார்க்கெட் சினிமாவில் ஓங்கி உள்ளது. ஆம் அந்த வகையில் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இதனை அடுத்து தெலுங்கில் சகுந்தலம், யசோதா போன்ற சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் நடிகைகளான கார்த்தி மற்றும் சமந்தா இருவரும் ஒன்றாக இணைந்து இதுவரை நடிக்கவில்லை. அதனால் தற்போது பேச்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சதிஷ் செல்வகுமார்.
இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சமந்தா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியே வரவில்லை அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.