வௌவால் போல் தலைகீழாக தொங்கும் சமந்தா 4மணி நேரத்தில் 10 லட்சம் லைக்ஸ்களை குவித்த புகைப்படம்.!

தமிழில் ஒரு சில திரைப்படத்தில் நடித்த நடிகைகள் பலரும் தற்போது தமிழ்,தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் கமிட்டாகி பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கிய நடிகை தான் சமந்தா இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது அயராத உழைப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் ஆம் தெலுங்கில் இவர் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமந்தா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சமந்தா நடிப்பில் த்ரில்லர் கதை களம் கொண்ட ஒரு திரைப்படமும் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் சகுந்தலம் என்ற காவிய திரைப்படத்திலும் நடித்து வலம் வருகிறார்.

சினிமாவில் சமந்தா பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் சமந்தா தலைகீழாக தொங்கி யோகா செய்யும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.

samantha
samantha

இதனையடுத்து இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கு தினமும் இதே மாறி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment