தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவர் தமிழில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், ஆகிய முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.
பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் படவாய்ப்பு வருவது கடினம் அதனால் சீரியல் பக்கம் திரும்பி விடுவார்கள், ஆனால் நடிகை சமந்தாவுக்கு திருமணம் ஆன பிறகும் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு தான் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்துள்ளன.
சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்கிறார். மேலும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பார் இதற்கு சூப்பர்டீலக்ஸ் படத்தின் அவரின் உடல் அமைப்புதான் உதாரணம்.
இந்தநிலையில் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் சமந்தா இவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்வாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
.@Samanthaprabhu2 Wonder Woman ? ????
Dedication ?? pic.twitter.com/lfBwuf2zog
— Vishnu Thej Putta (@VishnuThejPutta) August 21, 2019