சமந்தாவின் வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

நடிகை சமந்தா அதர்வா நடித்து வெளியாகிய பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு அமையாது ஆனால் நடிகை சமந்தாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமைந்தது.

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த ஜானு திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்ப்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓடவில்லை,  மேலும் அண்மைக்காலமாக நடிகை சமந்தா கற்பமாக இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சமந்தா ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, இவர் நூறு கிலோ எடையைத் தூக்குவது போல் ஒரு வீடியோ வந்துள்ளது, இதைப்பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது எதற்கு இதையெல்லாம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

https://twitter.com/starframes4u/status/1235992781966807040

Leave a Comment