11 வருடங்களில் 11 மில்லியன்.! சமந்தா வெளியிட்ட மரணமாஸ் வேற லெவல் ஸ்பெஷல் வீடியோ.!

samantha got 11 million in Instagram : திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா ஆவார். இவர் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். தற்போது உள்ள பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிக்க சமந்தா திகழ்கிறார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு  மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தற்போது சமந்தா தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தன் மாமனாருடன் செடி நடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து யோகா செய்வது, தன் கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் சிங்கில்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது என்று கிண்டல் அடித்தனர்.

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தவரும் சமந்தாவின் பாலோஸ்சர் 11மில்லியனை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் திரையுலகின் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே பாலோஸ்சர் 11 மில்லியனைத் தாண்டியது.

அந்த வகையில் தற்போது சமந்தாவின் பாலோசரும் 11 மில்லியனைத் தாண்டியுள்ளது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக அமைகிறது.இந்த நிலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சமந்தா தனது கியூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment