ஜிம் உடையில் ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சமந்தா.! வைரலாகும் வீடியோ.!

samantha
samantha

தெலுங்குசினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம். இந்த திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் வசூலில கல்லா கட்டி வருகிறது.  இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.  ஓ சொல்றியா ஓஹோ சொல்றியா என்ற பாடலுக்கு தான் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்தப் பாடலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தாலும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்தப் பாடல் படமாக்கபடுவதர்க்கு முன்பு சமந்தா ரிகர்சல் பார்த்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து லைக் அள்ளி குவித்து வருகிறது.

சமந்தாவிற்கு இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிறகு சமந்தா இனிவரும் திரைப்படங்களை ஐட்டம் டான்ஸ் ஆடுவார் என ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள் ஆனால் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தால் சமந்தாவின் மார்க்கெட்  அடி வாங்கி விடும் என்பது அவருக்கே தெரியும்.

அதனால் இனி ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட மாட்டார் என ஒரு சிலர் கூறி வருகிறார்கள். ஏற்கனவே சமந்தாவின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முறிந்து விட்ட நிலையில் தற்போது முழு மூச்சாக படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியிருக்கும் நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை அவரே கெடுத்துக்க விரும்பமாட்டார்.

இதோ சமந்தா நடனமாடிய வீடியோ.